வாழ்கையின் வெற்றி கொடிகள்

அறிமுகம் இல்லை -முன்
அனுபவம் இல்லை

ஆனாலும் என் வாழ்கை
என் நெஞ்சை பந்தாடுதே

அலை போல வந்து அங்கு
என் உயிரோடு விளையாடுதே

காணாத ஊருக்கு கை பிடித்து
என்னை இழுத்து செல்லுதே

நான் எதை மறந்தாலும்
என் இதயம் பூ போகுதே

நிழல் பிடிக்கும் குழந்தையாய்
என் எண்ணம் திண்டாடுதே

காரணம் இல்லாமல் இரவில்
அது என்னை எழுப்புதே

கானல் நீராய் பூக்கள் கண்டேன்
நான் அருகில் சென்றதும்
அது போர்க்களம் ஆக கண்டேன்

போர்களமும் ஒரு நாள்
பொற்காலம் ஆகும் என்று
பொறுமையுடன் காத்து இருப்பேன்

அன்று வெற்றி கொடிகள்
என் கைகளில் இருக்கும்

எழுதியவர் : கவிஞர் : ஜெ .மகேஷ் (8-Jun-12, 12:34 pm)
சேர்த்தது : jgmagesh
பார்வை : 311

மேலே