இயல்பாய் வாழு

மது, மாது , சூது
மானிட வாழ்வின் சீர்கேடு
தாவுது அவரவர் மனசு
தடுப்பது வாழ்வில் கடிசு

ஆசை என்பது அளவோடு
அகிலம் என்றும் உன்னோடு
வாழணும் வாழ்வின் இயல்போடு
மறுப்பவர் வாழ்வோ தெருவோடு

சக்தி என்பது உன்னை சுற்றி
வளரணும் நாளும் அதைப்பற்றி
உன்னுள் மலரணும் புதுயுக்தி
உலகம் வியக்கணும் அதைப்பத்தி

ரிக்டர் அளவு கூடிச்சுனா
ஹெக்டேர் அத்தனையும் நாசந்தானே
மேட்டர் புரிஞ்சு வாழ்ந்து பார்
மோட்சம் மண்ணில் கிட்டும் பார்

எழுதியவர் : alavudeen (12-Jun-12, 7:06 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 187

மேலே