திசை எட்டும் ஆளும் தமிழ்

எங்கும் தமிழ் எஙகள் தமிழ்
பொங்கும்இன்ப பொங்கல் தமிழ்
தங்கும் தமிழ் தங்கத்தமிழ்
சங்கம் கண்ட மதுரத்தமிழ்

சொல் மலரும் சோலைத் தமிழ்
தென்பாணடி பொதிகை தமிழ்
நெஞ்சை அள்ளும் இன்பத்தமிழ்
நேர்மை வெல்லும் சிலம்புத்தமிழ்

சோழர்கொடி புலி வீரத்தமிழ்
தஞ்சை மண்ணின் நெல்லு தமிழ்
முன் விளைந்த முத்து தமிழ்
மூத்தவளம் காத்த தமிழ்

கொஞ்சு தமிழ் கொங்கு தமிழ்
கோவை தமிழ் (ஏனு) ங்ங்கத்தமிழ்
பாவை மொழி பிஞ்சு தமிழ்
முத்தமிழில் சேர மொழி.

வடக்கினில் யாழின் தமிழ்
கிழக்கு மலை கோணத் தமிழ்
தென்மேற்கின் தென்றல் தமிழ்
திசை எட்டும் ஆளும் தமிழ் !

எழுதியவர் : Panneer (19-Jun-12, 4:52 am)
சேர்த்தது : thamileelan
பார்வை : 256

மேலே