சமூக அவலம்(கவிதைத்திருவிழா) 30 வரிகள்
யார் வயிற்றுப்பசிக்கு உணவிட
உருவாகின இந்தச்சாதிகள்
யார் வீட்டுத்தோட்டத்தில் அரும்பின
இந்த ஆலகால விஷப்பூண்டுகள்
எந்த மழை பெய்து
இந்தக் காளான்கள் பூத்தன
மானுடக் கதம்பத்தில் சாதி மலர் கலந்தால்
ஒற்றுமை வாசனை ஒப்பாரி பாடிவிடும்
மானுட நந்தவனத்தில் சாதிப் புயலடித்தால்
முன்னேற்ற மலர்கள் மாண்டுப்போகும்
மானுடவானில் சாதிமேகங்கள் நிலைபெற்றால் நட்புறவு நிலா ஒளி இழக்கும்
மானுட வானவில்லின்
சாதி வண்ணங்கள் மோதிப் போரிட்டால்
கரிசல் மண்ணிலங்கள் விரிசலுடன்
விகாரமாய் சிரித்திடும்
எதிர்காலம் தெரியாமலுறங்கும்
சாதி உறக்கத்தை அழிக்காவிடின்
மானுட வீதிகளில் மனித குருதி வெள்ளமாகிடும்
நீர்க்குமிழி வீக்கங்களாய்
வண்ணத்துப்பூச்சி சண்டைகளாய்
உள்ளபோதே சாதிகள் பெயரால் சதியரசியல்
சதுரங்க ஆட்டம் நிற்க எழுதுங்கள்
ஓரினம் மனிதயினம் வாழ ஓ(ஊ)ராயிரசாதிகளா
ஆறடிநிலத்திற்கு ஆயுட்கால யுத்தமா
உயிர் எரிப்புக்களா ,உடல் வெட்டுக்களா
வெண்மணியில் கண்மணிகள்
இனி எப்போதும் கருகவேண்டாம்
எழுத்தில் வழி காண்போம்
ஏறறம் பெறுவோம்.