நீரும் நிலமும்
அசதி நிலத்துக்கு
நீர் கொடுத்த
ஒத்தடம் குளம்.
வயலுக்கு
தண்ணி காட்டியது
கால்வாய்
வாய்கால்
கடந்து வந்த பாதை ஆறு
நதி கடந்த குறத்தி
வாய்கால்
ஆறு பாதை மாறாமல்
சென்று
வெள்ளமாய் சேர்ந்து
வளைத்து
பூமிக்கு போட்ட வேலி கடல்
நீரைத் தேடி
நிலம் தொலைத்த
பள்ளம் கேணி
தோண்டி யெடுத்த
புதையல் கிணறு
உபரி
நீர்
கல்
நீர் உறிஞ்ச
நுழைத்த குச்சி
ஆழ குழாய் கிணறு
வான் கொடுத்த
நீரை
மொத்தமாய்
வாங்கி
நிறைத்து
சேமிக்கும்
வங்கி - அணை
கொஞ்சம்
கொஞ்சமாய்
நித்தம்
குட்டிக்கும்
நிலம்
கற்க கற்க நற்றமிழ்
தமிழ் அணை
வங்கி
முல்லை பெரியாறில்
கள்ள கணக்கெழுதி
தமிழ் நாட்டை
திவாலா
ஆக்க நினைப்பவனை
அணை
ஆழ அமுக்கு
நல்லபடி முடி.
நல்லா பிடி
முடி..
விடாதே
அணை
உதாவதபோது
அடி திருத்து
காக்க காக்க
நம்மினம்
இலை மறை காயாக
பச்சை பட்டுடுத்தி
மர பாவாடை கட்டிய
மலைக் குமரி
மேக முடி திருத்தி
பின்னி விட்ட சடை
கொட்டும் அருவி
உச்சி மோர்ந்த
தென்றலில் மணக்கும்
பூ வாடை
தீர்ந்தது
திருவிளையாடல்
புராண விடை!
ஏரி ஓடை
குளம் குட்டை
நிலமணிந்த கந்தல்
அதையும் திருட
அதிகாரம் ஆட்சி
அடச்சீ
கேவலம்
காரி
மாறி
துப்பாதா?
வானம் பார்த்து
நிர்வாணமாய்
நம்மண்ணே
நீர் தந்த கந்தலையும்
நீங்கள் கலைந்ததால்
நிர்வாணமாய் நம்மன்னை
திருடிய நீங்கள்!
உணரவில்லை
அவமானமாய்?
நிலமகள் காக்க
நீர் தந்தை தீர்மானமாய்.
வெள்ளை
மா துளிகள்
எடுத்து
கோலமிட
வந்த
வான் முகிலை
தட்டிவிட்டது
யாரு?
சிதறி
தெளிக்குது
பனிபொழிவு
மார்கழியும்
பால் கடலை
கண்டேன்
பெரும் 'மால்'
கடையை
கண்டேன்
எங்கே?
பெருமாளை,
காணாம்!
அவர்கள்
இன்னும்
துயில்
காண்கிறார்களோ
பள்ளிஎழுச்சி
பாட
யாரும் இல்லையா?