எது உண்மை.??!!
இறந்த உடன்
விடும் கண்ணீரில்
கறைந்து விடும் உறவுகள்
நாட்கள் உருண்டோட
மறந்துவிடும் உள்ளங்கள்
எது உண்மை..??!!
நீ இறந்தால் மறைவதில்லை
உன் பெற்றோர்கள்
அவர்கள் மறைந்தால்
இறப்பதில்லை உன் உணர்வுகள்
எது உண்மை..??!!
பத்துமாதம் சுமந்து
பத்திரமாய் அநாதை இல்லத்தில்
போட்டுசெல்பவளும்,
பாசம் காட்டி,
பரிவு ஊட்டி,
பக்குவமாய் வளர்த்தவரை
முதியோர் இல்லத்தில்
இட்டு செல்பவரும்
வலம் வரும் சமுதாயத்தில்
எது உண்மை..??!!
முகம் பார்த்து மலரும் காதலும்
பணம் பார்த்து வளரும் பாசமும்
உலவும் உலகில்
எது உண்மை ..??!!
மனைவி இருக்கும் பொழுதே
மறு மனம் தேடும் ஆணும்,
நடந்த திருமணத்தின்
களைப்புதீருமுன்
விவாகரத்து எனும் பெயரில்
வேறு மனம் சேரும் பெண்ணும்,
இருக்கும் இந்த உறவுகளில்
எது உண்மை..??!!
நீ வேண்டி வந்ததில்லை
இந்த உலக வாழ்க்கை
நீ விரும்பி முடிவதில்லை
இந்த மனித வாழ்க்கை
கனவாய் மாறும் காட்சிகளில்
எது உண்மை..??!!
கோடி பணம் கொட்டிக்கொடுத்தாலும்
திரும்பி வருவதில்லை நேற்றையபொழுதுகள்
அரும்பி விடுவதில்லை நேற்றையபருவங்கள்
உன் பதவியின் பகட்டு காட்டினாலும்
நிறுத்த முடிவதில்லை நாளைய சோதனையை
திருத்த முடிவதில்லை இறப்பின் வேதனையை ,
ஆனால்
ஒன்று மட்டும் என்றும் உண்மை
பிறர் துயர் துடைக்க
உன்னை தியாகம் செய்தால்,
உன் கருணை உள்ளதினால்
பிற ஜீவன்களிடம் சிநேகம் செய்தால்,
உன் முன்னேற்றம்
பிறர்க்கு ஊக்கம் செய்தால் ....,
நீ வாழ்ந்திடுவாய்
இவ்வுலகு சுழலும்வரை
மனங்களை வென்றிடுவாய்
மனிதர்கள் உலவும்வரை ..,
உண்மையாய்
இதுமட்டும் உண்மையாய் ..!!
என்றும்,,,என்றென்றும்,,,!!