ஒப்பில்லா உழவு (கவிதை திருவிழா)
பல தொழில் மக்கள்
ஒன்றா இரண்டா
அடுக்கினால் ஆகாயம் முட்டும்
அந்த ஆகாயமே உழவன்
ஏறிய கதை துன்பமோ துன்பம்
உழவுக்கு அஞ்சியவரையும்
உழவானே தாங்கும்
உன்னதமான மெழுகுவர்த்தி
அவன் கால் தடத்தில்
கதிர் அறுக்கும் இந்த சமுதாயம்
தன்னலமற்ற உழவன்
உழுது வாழ்கிறான்
அவனை தொழுது வாழும்
மக்களுகாக மாடாய்
தினந்தோறும் நிலத்திலே கால்பதிக்கிறான்
ஏர்பிடிக்கும் கரம் பற்றி
இந்த உலகம் நகர்கிறது
வெவ்வேறு பாதையில்
இங்கும் அங்குமாய்
விவசாய சூரியனாய் உழவன்
நெற்றி வியர்வை நிலத்திலே
உழுது உழைக்கும்
கரம் நீட்டி கொடுக்கும் வள்ளல்
கரத்தை ஒருபோதும்
நிமிர்த்திடாதவன் உழவன்
உழைக்கும் உழவன்
உழவை நிறுத்தினால்
உயர்ந்தோர் தாழ்ந்தோர்
ஒருவர்கூட உயிரோடு இருப்பதில்லை
ஏட்டிலே எழுதிய உண்மை
உழுவதை உரமிட்டு
நிலத்திலே நீர்பாய்ச்சி
களை எடுத்து
காவல் காத்து களம் சேர்த்தான்
உழவன் செய்தோமா செய்நன்றி