நிலவைக் கீறி நம் காதல் கதை

விளைந்த பயிரின் வேரைக் காணவில்லை
அய்யுரும் உயிரில் அழுகைக்கு குறைவில்லை,
காதல் தந்தப் பெண்ணே
கவிதை தந்தக் கண்ணே,
இனி எங்கே தேடுவேன் உன்னை,
உன்னில் தொலைந்த என்னை,
இடைவெளி இல்லாது பட ஒளி இல்லாது
தொட்ட உடல்கள் கடல்களின் தொலைவிலா,
விழி மடல் பார்த்து கழித்திட்ட காலங்கள்
அழிந்திடுமோ பழி ஏதும் சொல்லாமல்,
விழி முழுதும் வெந் நீரை தந்துச் சென்றாய்
செவி வழி பாய்ந்த உன் செந்தமிழ்
இனி கிடைக்குமா என் செவிக்கு அப்புகழ்,
உள்ளங்கைகள் விளையாடிய கன்னங்கள்
இனி கிடைக்குமா அவ்வருடல்கள் என கண்ணிப்
போகின்றன அவைகள்,

எழுதியவர் : த.பொன்மாரியப்பன், (21-Jun-12, 11:25 pm)
பார்வை : 219

மேலே