நிலாப் பெண்ணே
நிலாப் பெண்ணே!
நிலைகொள்ளா
நினைவலைகள்
நீ விதைத்துப்போன
உயிர் வலிகள்!
விழிகள் தொலைந்த
பின்
கனவுகள் எதுக்கடி?
வலிகளே வாழ்கையான பின்
உன் நினைவுகள்
எதுக்கடி?
தவறவிட்டேன்
இருட்டு வீட்டில் தீக்குச்சியாய்
உன்னை!
தவறிவிட்டேன்
உன் நினைவுகளில்
என்னை!
கைகள் இழந்தவன் கூட
கனவுகளின் கதவுகளைக்
கைகள் கொண்டே திறக்கிறான்!
கனவுகள் இழந்தவன்
நான்!
பட்டாம்ப்பூச்சிகளின்
படபடப்புகளும்,
சிட்டுக்குருவிகளின்
சிறகடிப்புகளும்,
கேயாஸ் கோட்பாடுகளுக்கு
வேண்டுமானால்
பொருந்தலாம்!
என்ன செய்தாலும்
இழந்த காதல்
ஒரு
இழந்த சொர்கமே!