தாடி பன்னி வாங்க

கடைத்தெருவில் ஒரு பெண்:




தாடி, பன்னி என் பின்னாடி வாங்க.


@@@#####

என்னங்க அந்த அம்மாவுக்கு மனநிலை

சரியில்லையா? தாடியை வரச்சொன்னா

வருமா? பழக்கப்பட்ட பன்றியா இருந்தா

கூப்பிட்டா வரும். கடைத்தெருவில்

பன்றிக்கு என்ன வேலை?


#@#########

இதைக் காதில் கேட்ட கடைக்காரர் ஒருவர்:

ஐயா, அந்த அம்மா ஒரு பெரிய

அதிகாரியோட மனைவி. அவுங்க கணவர்

சில ஆண்டுகள் இஸ்ரேல் நாட்டில்

இந்தியத் தூதுவரா இருந்தாராம்.

இப்ப சீனாவில் தூதுவராக இருக்கிறாராம்.

அந்த அம்மாவும் பெரிய படிப்புப்

படிச்சவங்க. இப்ப கோடை விடுமுறைக்கு

குழந்தைகளைக் கூட்டிட்டு சொந்த ஊருக்கு

வந்திருக்கிறாங்க. அவுங்களுக்கு இரண்டு

பெண் குழந்தைகள். அதோ அங்கே

வர்றாங்களே பாருங்க.

@@@@@@@

அது சரி. எதுக்கு பன்றியையும் தாடியையும்


அவுங்க பின்னாடி "வாங்க'னு

சொன்னாங்க?

@@@@##

அவுங்க மூத்த பொண்ணுப் பேரு 'தாடி'.

சின்னப் பொண்ணோட பேரு 'பன்னி'.

@@######@@@

என்னங்க அநியாயம்? பெத்த

பிள்ளைகளுக்கு 'பன்னி',

'தாடி'ன்னெல்லாம் பேரு வைக்கிறது?

@@@@@@@@

ஏங்க அவுங்க ரொம்ப படிச்சவங்க.

வெளிநாட்டில் இந்தியத் தூதுவர். மிகப்

பெரிய பதவி. நாம் நம்ம பிள்ளைகளுக்கு

இந்திப் பேரை வைக்கிறோம். நமக்கு இந்தி

தெரியாது. நாம் பிள்ளைகளுக்கு வைக்கிற

இந்திப் பேருங்களுக்கு அர்த்தமும்

தெரியாது. அவுங்க அவுங்க பெண்

குழந்தைகளுக்கு வெளிநாட்டுப்

பேருங்களை வச்சிருக்காங்க. இதில்

என்னங்க தம்மைக் கேட்டீங்க?

@@@@@@@

என்னம்மோ போங்க. நாம் நம்ம

பிள்ளைகளுக்கு இந்திப் பேருங்களை

வைக்கிறதும் சரியில்லை. அவுங்க

பிள்ளைகளுக்கு அவுங்க வெளிநாட்டுப்

பேருங்களை வைக்கிறதும் சரியில்லங்க.

நம்ம பிள்ளைகளுக்குத் தமிழ்ப்

பேருங்களை வைக்கிறதுதாங்க

தன்மானம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Thadi = Given Praise. Hebrew origin.
Panni = Grace, Favour. Hungarian origin

எழுதியவர் : (14-Nov-24, 3:39 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 4

மேலே