ஏமாளி-ன்னா களித் தின்ன ஆசையானு கேளுடி
ஏம்மா உனக்கும் அப்பாவுக்கும் தமிழில் பேருங்களே
கிடைக்கலையா?
@@@@@@@@@@@@@@
ஏம்மா, என்னாச்சு?
@@@@@@@@@@@@
எனக்கு நீங்க வச்சிருக்கிற பேரோட இலட்சணம் உங்க இரண்டு
பேரையும் புகழ்ந்து பாராட்டு விழா நடத்தணும் போல் இருக்குது.
@@@@@@@@@@@@
என்னடி சொல்லற ஹேமாளி கண்ணு?
@@@@@@@@@@@@@@@@@
அந்த ஹேமாளி தான் கல்லூரில் ஏமாளி ஆகுது. தமிழ்த் தெரிஞ்ச
இந்திக்கார மாணவிகளே என்னை "ஹேமாளி ஏமாளி"னு கிண்டல்
பண்ணறாங்க.
@@@@@@@@@@@@@
ஏண்டி பிரபல ஜோதிடர் நீ பிறந்த நேரம், இராசி எல்லாம் கணிச்சு
உலகத் தமிழர் யாரும் வைக்காத இந்த ;ஹேமாளி'ங்கிற பேரை
உனக்கு வைக்கச் சொல்லிச் சொனாரு. அந்த ஜோதிடரைப்
பார்க்கிற பாக்கியம் ஒரு சிலருக்குத் தான் கிடைக்கும். அவர் பல
நாடுகளுக்கு பயணம் செய்யறவர். இந்தியாவில் ஒவ்வொரு
மாநிலத் தலைநகருக்கும் ஆண்டுக்கு இரண்டு நாள் தான் வருவார்.
அவரைப் பார்க்க கட்டணம் பத்தாயிரம். உலகத் தமிழர் யாரும்
வைக்காத இந்திப் பேரைக் கணிச்சுச் சொல்ல அவருக்குக்
கட்டணம் ஒரு இலட்சம்.'ஹேமாளி' ஒரு இலட்ச ரூபாய்ப் பேருடி
ஹேமாளி.
@@@@@@@@@@@
நீங்க வச்ச ஒரு இலட்ச ரூபாய் பேரு எனக்கு வேண்டாம், வேற
இந்திப்
பேரை வச்சு அதிகாரப் பூர்வமா மாத்துங்க. இல்லன்னா எதாதவது
தமிழ்ப் பேரையாவது எனக்கு வச்சுத் தொலையுங்க.
@@@@@@@@@@@@@@
அதெல்லாம் முடியாது. கேலி, கிண்டல் பண்ணறவங்க மேல புகார்
விண்ணப்பம் கல்லூரி முதல்வர்கிட்டக் கொடுத்தாப் போதும்.
நாலு பேரை இடைநீக்கம் (ச்ஸ்பெண்ட்) செஞ்சாப் போதும்
உன்னைக் கிண்டல் பண்ணறவங்க எல்லா,ம் திருந்திக்குவாங்க.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்தா கிண்டல்
பண்ணறவங்கள காவல் நிலையத்துக்கு வரவழைச்சு நல்லா
கவனிச்சு அனுப்புவாங்க. அவுங்கள்ல எவனாவது திமிராப்
பேசினா மூணு மாசம் உள்ள தள்ளுவாங்க. அதுக்கப்பறம்
யாரும் இந்த அழகான 'ஹேமாளி'ங்கிற பேரைக் கிண்டல்
பண்ணமாட்டாங்கடி ஹேமாளி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Hemali (हेमाली) =
‘Ice’, ‘Golden Skin’