மனிருகம்

பதுங்கி பாய்வதில்லை
பற்களும் கோரமில்லை
பிணங்களை தின்பதில்லை
பிறப்பினில் குறையுமில்லை
காடுதனில் வாழ்வதில்லை
கொடிவிசமும் உமிழ்வதில்லை
ஆற்றலும் பெரியதில்லை
ஐந்தறிவு கொண்டதில்லை

இருந்தும்
மனிதன் கண்டு மிரளும்
மிருகம்............................

மனிதன்.

தாய் மொழியும் புரிவதில்லை
தந்தை வலியும் அறிவதில்லை
காட்சிப் பொருளை கையாளுகிறான்
சொந்தப்போருளை கைவிடுகிறான்

நாடாளும் வாதிகளின்
வாதம் வாந்தி பின்னணியில்
நெற்றியினில் பொட்டு வைத்து
நெடுந்தொலைவு வந்தவளை
நெஞ்சினிலே அடிக்கவைத்தான்
நெஞ்சுருக அழுக வைத்தான்

முதுகை சுரண்டும் புழுவை மறந்து
மதுவில் தினமும் உருண்டு பிரண்டு
பொதுமக்கள் காட்சிப் பொருளாய்
தம் மக்கள் அழுது நிற்க
தானம் செய்கிறான்..........

உண்ட பாலை இரத்தமாக.

குற்றம் கண்டு கத்திவிட்டால்
உள்ளிருந்து 'கத்தி'விடும்
உள்ளம் கண்டு நொந்து போனான்
வெள்ளை ஆடை உடுத்தியவன்

கோவில்தனில் குளங்கள் உண்டு
கண்ணீர் கொண்டு நிறைத்துவிட
நீர் மட்டம் பார்த்திடவும் கடவுள் இல்லை கருவறையில்

தான் செய்த தவறுக்காக
தண்டனையை ஏற்றுக்கொண்டு
தனிமரமாய் சென்றுவிட்டான்
பூமி என்னும் கோளை விட்டு.

மனதை கொஞ்சம் மாற்றிக்கொண்டு
மனிதன் நிலையை புரிந்து கொண்டு
திரும்பி வந்தால் இடமும் இல்லை
பத்திர பதிவு முடிந்த பின்பு.....

ஆண்டவனே அழுதுவிடு
அரைகுறையும் தீர்த்து விடு
ஆறு குளங்கள் நிறைந்துவிடும்
அன்பு என்னும் வார்த்தைக்காக............

எழுதியவர் : ஜெ.நாகபாண்டி (1-Jul-12, 11:18 pm)
பார்வை : 177

மேலே