வானம் பூமி வாழ்க்கை
பறந்து விரிந்து உயர்ந்த வானம்
அகண்டு ஆழ்ந்து செழித்த பூமி
அற்புதம் தனித்துவம் சிறப்பு வாழ்க்கை!
நமதே நமதே இது நமதே!
வாழ்ந்து வாழ்ந்து வாழ்வை நேசி!
உணர்ந்து உணர்ந்து உணர்வை யோசி!
இருந்து இருந்து இருப்பை வாசி!
அன்பு எங்கும் பெருகட்டும்!
ஆத்ம ஞானம் பிறக்கட்டும்!