[273 ] கேட்டதும் கேட்க நினைத்ததும் [தலைப்புச் செய்திகள்] நகைச்சுவைக்கு !

கருணை மனு மீது
முடிவெடுப்பது
ஜனாதிபதிக்கு
மகிழ்ச்சியான ஒன்றில்லை!

......அதனால்தான்
......தண்ணீருக்கு அழும்
......மாநிலங்களுக்குக்
......கருணை காட்டமுடியவில்லையோ?

சிறை நிரப்பும்
போராட்டம் நடத்துபவர்கள்
ஜாமீனில் வெளியே
வரக் கூடாது..!

....பைநிரப்பும்
....ஊழல்காரர்கள் மட்டுமே
....அந்தச் சலுகையைப்
.....பயன்படுத்தவேண்டுமோ?

செயல்படாத
ஐ.ஏ.எஸ் ,ஐ.பி.எஸ்
அதிகாரிகளுக்கு
ஓய்வளிக்க
மத்திய அரசு உத்தரவு..!

....ஐ.ஏ.எஸ் ,ஐ.பி.எஸ்
....இல்லாவிட்டாலும்
....பிரதமரிலிருந்து
....இதைத்
....தொடங்கலாமா..?

நாட்டின்
உயர்ந்த பதவிக்குப்
போட்டியிடுவதால்
காங்கிரசில்
வெற்றிடம் எதுவும்
ஏற்படாது எனப்
பிரணாப் கூறினார்!

....அங்கேதான்
....நிறைய தலைகள்
....வெற்றிடமாகத்தான்
....உள்ளன என்பதை
....நாட்டின் பல
....பிரச்சனைகள்
....தெளிவுபடுத்திவருகின்றனவே
....என்பது காரணமோ?
-௦-

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (2-Jul-12, 8:46 am)
பார்வை : 633

மேலே