மழை - ஜோக்ஸ்

பேஷண்ட்: நேத்து ஒரே "அட " மழை டாக்டர்
டாக்டர் :"குடை" மழை தான் கேள்வி பட்டிருக்கேன் இது என்ன "அட" மழை ...?


Friend1: மச்சான் நேக்கு மழையில் நனைந்த "ஜல" தோஷம் வரும்டா
Friend2:மச்சி அப்படினா நீ குளிக்கவே மாட்டியா ?



விக்கி : டேய் உங்க ஊர்ல நேத்து "மழை வெள்ளம் "மாம் பேப்பர்ல பாத்தேன்
சிவா : ஆமாண்டா யாருமே வீட்ட விட்டு வெளியவே வரல
விக்கி: இப்படி தொடர்ந்தால் "பால் செலவு" மிச்சம் தாண்ட


Friend1:ஹல்லோ மச்சான் காலேஜிக்கு கிளம்பிட்டியா டா
Friend2:இல்லடா மச்சி
Friend1:ஏன்டா
Friend2:இங்கே ஒரே மழை டா
Friend1:அப்படியா அப்போம் எப்படி வருவ ...?
Friend2:மழை நின்னதும் வாறேன்டா
Friend1:அப்படினா நீ ஏழு ஜென்மத்துக்கும் வரவே முடியாது டா
Friend2:ஏன்டா
Friend1:மழை எந்த ஊர்களையாவது நிக்குமா டா மழை விழ தான் செய்யும் ஹா ஹா



செந்தில் : அண்ணே மழை விழுந்த ரத்தம் வருமா ...?
கவுண்டமணி: இல்லடா தம்பி யுத்தம் தான் வரும்...!
செந்தில் : அது எப்படிண்ணே...
கவுண்டமணி: இப்படித் தான்டா நதிநீர் திட்டம், பெரியார் அணைத்திட்டம், இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...


செந்தில் :அண்ணேன் "மழை" வந்தால் மக்களு எண்ணனே இலவசம்...
கவுண்டமணி: புயலும் சுனாமியும் தான்டா தம்பி
செந்தில்: அப்படினா அரசாங்கத்துக்கு....?
கவுண்டமணி: வெள்ள நிவாரண நிதியும் கள்ள ஓட்டும்

எழுதியவர் : ஹிஷாலீ (2-Jul-12, 12:11 pm)
பார்வை : 1423

சிறந்த நகைச்சுவைகள்

மேலே