ஒரு குயிலின் சோகம்................

குயிலுக்கு என்ன சோகம்:

ஆடிப்பாடி மகிழ்ந்து கிடந்த,
சிரிப்பை தனதாக்கிகொண்ட,
கணீர் குரலுக்குச் சொந்தக்கார குயில்,
கூவிநின்ற கனி மொழி சுகமான சோகம்.

வரம் எனக்கிடைத்தவன் ...,....
தவம் என நினைத்தவன்
மனமில்லை என விலகிவிட்டதால்

ஆடிப்பாடி சுற்ரித்திரியவில்லை......
என்றாலும் மனமொத்து சந்தோசமாய்
இருந்தேன் மாதங்கள் ஏழு..........

இனி ஜென்மங்கள் ஏழும் உன்னோடுதான் என்று சொன்னவன்,,,,,,,,,,,இந்த ஜென்மம் கூட
உன்னுடன் வேண்டாம் என்று சொல்லி விட்டான்...........

கூடநின்ற, கூடித்திரிந்த காதலன்
ஓடி மறைந்தபின்னும் தேடிவர
தென்றலுக்கும் துணிவில்லை,
கண்ணீரில் கவிதைஎழுதினதால்.

தனிமையில் கூவி நிற்கின்றது ..
தனக்கு சிறகு முளைத்து விட்டது என எண்ணிப்பறக்க நினைத்ததால்...........
தன உறவுகளைப்பிரிந்து.........

குயில் அழகான குரலில் கூவினாலும் ..........
அது எப்போதும் ரசிப்பதர்க்கு மட்டும் தான் என்பதை புரிந்து கொண்டு .........
தன் சோகத்தை மறைத்துக்கொண்டு .........
மற்றவர் சந்தோசத்துக்காய் கூவுகின்றது...........

எழுதியவர் : கவிதை தேவதை. (3-Jul-12, 8:02 am)
Tanglish : oru kuyilin sogam
பார்வை : 296

மேலே