கடற்கரையில் ஒரு நாள்
கறை இல்லா அந்த கடற்கரை
ஒரு தனிசிறப்பு மிக்கது தான்
அலைகள் வந்து என் கால்களை வணங்கும்பொழுது
என்னை நானே சிறப்பாய் சிந்திக்க வைக்கிறது
கரையோரம் ஒதுங்கிய சிப்பிகள்
அதை பொறுக்கும் பொழுது என் வயது வீசமானது
தூரத்தில் சிறுபிள்ளைகள் கட்டிய மணல் வீட்டை கண்டேன்
நினைவூட்டியது என்னை எனக்கே
திரும்புமா அந்த மழலைகாலம்???
எப்போது இழந்தேன் இம்மாதிரி சுதந்திரத்தை???
பரந்து கிடந்த மணல் படுக்கையில் படுத்தேன்
தாய் மடியின் சுகத்தை பெற்றேன்
பல ஆண்டுகள் கழித்து.....
மனமடைந்த நிம்மதியில்
மாங்காய் கடிப்பதற்கு கூட
வாய் திறக்க முடியவில்லை
இது ஆசை துறந்த வயதென நினைத்த எனக்கு
அன்று பிறந்தது பல ஆசைகள்
குதிரை ஏற நண்டை துறத்த
மணலில் ஓட பெயரை எழுத
அலையில் விளையாட மழையில் நினைய
பருவங்கள் திரும்பிட பாவங்களை புதைத்திட
மனிதன் சொந்தம் கொள்ளாத
அந்த ஒரு நிலத்தில்
இறுதியில் வீடு திரும்ப பேருந்தில் ஏறினேன்
”எங்கே போக வேண்டும்??” என்று கேட்டார் நடத்துநர்
”எங்கே போக வேண்டாமோ, அங்கே” என்றேன்
மொத்தத்தில், கடற்கரை அது
கவலைகளின் குப்பைத்தொட்டி
கனவுவரும் மணல்கட்டில்
கவிஞர்களின் சங்கம்
கவிதைகளின் சங்கமம்

