நல்லதொரு குடும்பம்

ஆபத்தில் ஆதரவு கொடுப்பவன் அண்ணன்
ஆனால் ஆபத்தில் இருக்கும் நேரத்தில்
உறவை அவிழ்த்து விட்டாரே பணத்திற்காக
ஆபத்தில் ஆறுதல் சொல்பவள் தங்கை
ஆனால் ஆபத்தில் மனமாறுதல் அடைந்து
ஏமாற்றி விட்டாளே பணத்திற்காக
ஆபத்தில் உபகாரம் செய்பவனும் அண்ணன்
ஆனால் நிலத்தை அபகரித்து விட்டாரே
வாழ்க்கையை வெறுத்த தம்பி
இவர்களிடம் இருந்து விலகி விட்டானே
முதல் மூன்று பணக்கார நரிகள்
நலமாய் வாழ்வதற்காக
ஒரு மான் தனது உழைப்பை இழக்கிறது.
அந்த மனிதர் ஏமாளியாக் இருக்கிறார்.
ஆனால் அவரை அவரது உடன்பிறப்புகள்
கோமாளியாக பார்க்கிறது.
இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்கும் தாய்
நல்லதொரு குடும்பம்
என்னைப் பொறுத்தவரை ஏமாற்றுபவர்களை விட
ஏமாறுபவர்களே தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.