எங்கே மனிதம் ?.....

வாடிய பயிரை கண்டபோதெல்லாம்
வாடினார் வள்ளலார் !
வலியால் துடிப்பவனை கூட எட்டி நின்று
வேடிக்கை பார்ப்பவர்களே இங்கு அதிகம்.
மனிதன் இழந்தது தன் சுய அறிவை மட்டுமல்ல
மனித நேயத்தையும் தான்.
தன் மூச்சையே உயிராய், தனக்களித்த அன்னையையும் தவிக்கவிடும்
பாசமில்லா மிருகங்கள். குழந்தையின் பசியை
காரணம் காட்டி, தன் வயிறை நிரப்பும் கனவான்கள்!
மற்றவனின் துயரைக் கண்டு எள்ளி நகையாடும்
ஏமாற்றுப் பேர்வழிகள்,
வெறி பிடித்த வேங்கைகள் வேட்டையாட,
இரையை கீறி கிளித்துன்னும் பருந்துகள் போல,
உயிரற்ற உடலையும் கூட விட்டு
வைக்காத வெறியர்கள்,
அத்தனையும் கண்டும் காணமல்,
கையாலாக நிலையிலே எம் தேசம்!
தடுப்பது இயலாதெனில் முறையிடுவோம்
"இறையிடமேனும்"
பிரார்த்தனை செய் நண்பா ,
எந்நிலையிலும் எம் தேசம் அழியாதிருக்க,
இடர்கள் இல்லா இந்நுயிர் நிலைத்திருக்க,
பிரார்த்தனையாயினும் மீட்கட்டும்,
மனிதனிடம் காணாமல் போன மனிதத்தை.

எழுதியவர் : சபரி (11-Jul-12, 11:39 am)
சேர்த்தது : sabari.m
பார்வை : 794

மேலே