உரங்கள் குப்பைகளல்ல

மனசெல்லாம்
நிறைகிறது
கல்லும் கரடுமற்ற
பாதையில் நடக்கையில்!

பயணம் என்றும்
தொடரும்
முடிவதில்லை
எப்போதும்!

மா பலா வாழை
உருவங்களில் (குணம்)
சுவைகளில் (அழகு)
தான் மாற்றம்
என்றும் இனிப்பவை
மாற்றப்படுவதல்ல
மாற்றிக் கொள்வதில்லை
என்றென்றும்!

புவி ஈர்ப்பு விசைகண்ட
நியூட்டன் கூட
மேலே மேலே சென்றும்
தோற்றான் உன்
ஈர்ப்பினால் !

தீக்குச்சிகள்
பாவிகள் அல்ல!
தன்னை உயிராக
தன்னையே எரித்துத்
தியாகம் செய்பவர்கள்
உரமிடுபவர்கள்
புதைக்காமல் !

முழு சுதந்திரம்
கிடைத்தபோதும்
கல்லறை
வாழ்க்கைதான்
இன்றுவரை !

உலகில் உள்ள
அனைத்தும் எரிந்து
சாம்பலாவதில்லை !

சிலவை உரமிடுகின்றன !
சிலவை மிதக்கின்றன

வேறு வழியின்றி
சமர்ப்பணம் அனைத்தும்
கடல் தேவதைக்கு !

எழுதியவர் : செயா ரெத்தினம் (12-Jul-12, 1:12 pm)
பார்வை : 246

மேலே