உனக்குத் தெரியுமா

மயில்
என்றுமே
தோகை விரிப்பதில்லை !
மேக மூட்டம்
வரும் போது மட்டுமே!

காற்றைத் தேடி
அலைந்து திரிந்து நீ....
உனக்குப் புரியவில்லை
உன் பேனாவில்
இருக்கிறேன் என்று !

வாகனங்கள் கூட
என்னைக் கண்டு
வழி அனுப்புகின்றன
மோட்சத்திற்கு !

காற்று வாங்கப் போனால்
அலைகள் கூட
என் நினைவுகளைக்
கேட்டு விட்டுச்
செல்கிறது
கடலுக்குத் தூதாக !

வேர்களில் இல்லை
உயிர் பூக்கள்
ரகசியம் !
மண்ணுக்குள்ளே
புதைந்த விதைகளின்
மீது தான் என்று !

எழுதியவர் : செயா ரெத்தினம் (12-Jul-12, 12:58 pm)
பார்வை : 457

மேலே