மரம்

மரம்
அழும்-அழுகும்
சிரிக்கும்-எரிக்கும்
பார்க்கும்-வேர்க்கும்
கேட்கும்-தாக்கும்
ரசிக்கும்-ருசிக்கும்
காதலிக்கும்-காவலாகும்
புணரும்-உணரும்
பறவைகளோடு பறக்கும்-பாடும்-
அணில்களோடு ஓடும்-ஆடும்

மரத்திடம்
எது இல்லை-எவன் இல்லை
எல்லாவற்றையும்
கண்டும் கேட்டும்
நியாயாதிபதியாக நிற்கும்-
நிலைக்கும் ???

ஆனால் மனிதனிடம் மட்டும்
கெஞ்சும்-அஞ்சும்...!!

எழுதியவர் : புதுவை காயத்திரி A1B+ (12-Jul-12, 11:08 pm)
சேர்த்தது : puthuvai gayathiri (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 1409

மேலே