பாட்டு வாத்தியார்
ஒன்னு - ஓவியங்கன்னு!
ரெண்டு - ராமலிங்கம் துண்டு!!
மூணு - முருங்கக்கா தோலு!
நாலு - நாய் குட்டி வாலு!!
அஞ்சு - அவரைக்கா பிஞ்சு!
ஆறு - அரமனகாறு!!
ஏழு - எலி குட்டி வாலு!
எட்டு -டம டம கொட்டு!!
ஒன்பது - பாட்டி வெத்தல திம்போது!
பத்து - பதிக்கத்த முத்து!!
இத "சத்தம் போட்டு படி!
சாவளவுக்கும் மறக்காது!!"ன்னு
எங்க பாட்டு வாத்தியார் சொல்லிக்கொடுத்த பாட்டு இது!...
அவர் எழுத்தை அவராலேயே
படிக்க முடியாது.......ஆனால் இந்த
பத்து எழுத்தையும் படிக்க வைக்க
அவர் பட்ட பாடு!!.....அப்பப்பா!!...
சொல்லிமாளாது!.....
உங்க கூட கத்திக் கத்தி
தொண்டத்தண்ணி வத்திப்போச்சு என்பாரு!...
ராகம் போட்டு படிப்பார்! - மாணவர்களை
ரகம் ரகமாய் பிரிப்பார்!!
பாடம் என்னென்னவோ....ஞாபகமிருக்காது!
ராகம் போட்டு அவர் பாடிய இந்தப் பாடல்
பாடையிலே போகையிலும்
படிப்பவர்க்கு மறக்காது!!....
இறந்து போனார் - பாட்டு வாத்தியார்
இறவாது அவர் பாட்டு
இறங்கி வரும் இந்த இன்ப வலியை கேட்டு!!.......