காமுகன் அல்ல உன் காதலன்

தனிமையின் தாகங்களை

உன்னால் உணர்ந்து கொண்டேன்!

இரவுகளின் ஏக்கங்களை

உன்னால் அனுபவித்தேன்!

உன்னை களவாடிய அந்த

இரவின் எண்ணங்களை

இன்றைய இரவில் கூட்டி சேர்க்கிறேன்!

உன் உடலின் ஸ்பரிசம் தேவையன்று

உள்ளம் நினைத்தபோது,

உன் உடலோடு சேர்ந்த உள்ளமும்

தேவையன்று உணர்ந்து கொண்டேன்!

கனவுகளோடு காத்திருக்கிறேன் கட்டிலில்,

காமுகனாய் அல்ல

என்றும் உன் காதலனாய்!

எழுதியவர் : வெற்றி வேந்தன் (20-Jul-12, 2:47 pm)
சேர்த்தது : vetri vendhan
பார்வை : 199

மேலே