[299 ] படித்ததும் வெடித்தது [03 ] ..!
எழுத்தில் படித்ததும்
இதயத்தில் வெடித்தது:
முதலில் எழுதிய
கவிஞரைப் போற்றுமின்!
இதனைப் பின்னர்
எடுத்தே படிப்பீர்!:
------------
ரௌத்ரனின் கவிதை 'நற்றமிழ் சாகுமன்றோ?'
படித்ததும் எழுதியது..:
நாவுள தமிழைக் காட்டி,
...நாற்காலி தேட வில்லை !
பாவலர் பலரைக் கூட்டிப்
...பாராட்டப் பணிக்க வில்லை!
காவலாய் நிற்க வில்லை!
...கவிஞனே! தமிழ்த்தாய் பாதம்
நாவினால் கழுவி வாழ்ந்தேன்!
...நற்றமி ழோடும் வாழ்வேன்!
(ரௌத்ரனுக்குக் கண்ணதாசன் எழுதியதாக)
-௦-