%%%% கிறுக்கனின் கிறுக்கல்கள் %%%%
அதீத அன்புகூட நீ
வெளிப்படுத்துவோரிடம் அது
விஷமாய் தோன்றிவிடும் .................
>>>>>>>>>>>>>>>>
போதனை செய்யாதே மனிதா - அதை
உணர்ந்துகொள்வோரைவிட
உதறிச்செல்வோரே அதிகம் ..............
>>>>>>>>>>>>>>>>
கடமையை முடிக்க நினைப்பவனாயின் - நீ
காதலை நினைக்க மறந்துவிடு !
அறிந்து சொல்லவில்லை
அனுபவித்து சொல்கிறேன் .............
>>>>>>>>>>>>>>>>>>
காதலும் லட்சியமும்
சேர்ந்திருப்பது கடினம் !
சேரப்பெற்றவன் வாழ்வில்
தோற்பதென்பது மிக மிக கடினம் ...............
>>>>>>>>>>>>>>>>>>>
காதலைப்பற்றி
ஆராய்ச்சி செய்ய எண்ணாதே - உன்னால்
உருப்படியாக ஒரு உண்மைக்காதலை
அறிவதின்று கடினம் .........................
>>>>>>>>>>>>>>>>>>>
ஆயிரம் சொந்தங்கள் உனக்கிருந்தாலும் - உன்
அன்பிற்கு ஏங்கும் ஒருசொந்தமே அந்த
ஆயிரத்திலும் சிறந்த சொந்தம் .............
>>>>>>>>>>>>>>>>>>>
உனக்காக விட்டுக்கொடுப்பவனை விடவும்
உன்னை தட்டிக்கொடுப்பவனே என்றும்
உண்மையான நண்பன் ................
>>>>>>>>>>>>>>>>>>>>
முயற்சிதான் வெற்றியின்
முதற்படி என்றால் - அந்த
முதற்படி அடைய நீ
முன்னூறுமுறை தோற்றாலும்
முயற்சியை இழக்காதே .............
>>>>>>>>>>>>>>>>>>>>
தோல்வியை நேசி
வெற்றியின் விழிம்பு - உன்
விழியருகே தெரியும் ..............
>>>>>>>>>>>>>>>>>
தட்டினால் திறக்கும் உலகமல்லயிது
உடைத்தால் மட்டுமே திறந்துவிடும் !
உணர்ச்சியோடு போராடு உலகம் உன்கையில்
தோல்வி நிலையல்ல , வெற்றி வெகுதூரமல்ல.....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>