விடுதலையை வரைதல்

அவள் ஓவியம் வரைபவள்
கண்ணீர்க் கோடுகளை நன்றாக கீறுவாள்

தனிமையை தீட்டி இருக்கிறாள்
அடக்கு முறையை சித்தரிக்க முடிந்திருக்கிறது

துன்பத்தையும் சோர்வையும்
சொல்பவை பல ஓவியங்கள்

பலவீனத்தை படமாக்கி இருக்கிறாள்
வீடும் பணிச்செயல்களும்
உயிர்ப்பானவையாக இருக்கும்

இருளை இணைக்க முடிந்திருக்கிறது

ஆனால்
விடுதலையையும் ஒளியையும்
இறுதி வரை அவளால் வரைய
முடிந்திருக்கவில்லை..

எழுதியவர் : (22-Jul-12, 9:58 pm)
சேர்த்தது : sothithas
பார்வை : 224

மேலே