அலச்சியம்...!!
எல்லாம் எனக்கு வேண்டும்
எதுபற்றியும் அக்கறை எனக்கில்லை
அஞ்சோ பத்தோ கொடுத்தால் - எதிலும்
போட்டுத்தருவேன் கையெழுத்து
நான் நான் நான் சுகமானால் போதும்
என் வீடு என் பிள்ளை என் மனைவி
இவர்கள் நலமானால் போதும்
வாழ்க பொதுவாழ்க்கை! வாழ்க அரசு இயந்திரம்!
மனதை பதறவைக்கும் நிகழ்ச்சி
உயிரை உருகுலைக்கும் செயல்
நெஞ்சை பிசையும் நிகழ்வு
நடக்கும் போதுமட்டும்
அந்தசில நாட்கள் மட்டும்
பதறுவோம் சேருவோம் குரலெழுப்புவோம்
சிலநாள் வழக்கு ஓடும்
சிலமாதங்கள் ஞாபகம் ஓடும்
எல்லாம் மறந்து மனமும் ஓடும்
எதுவும் மாறது
எல்லாமும் மீண்டும் பழயபடி..
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிகழ்வும்
உயிர்வேதனை நமக்கு..
ஏன் ஏன் ஏன் அலச்சியம்?
போராடுவோம் போராடுவோம் போராடுவோம்
மாறும் வரை மற்றும் வரை
உறுதியாக போராடுவோம் தொடர்ந்து போராடுவோம்
நம்மால் எதையும் சகிக்க முடியும்
நம்மால் எதிலும் விட்டுக்கொடுத்து போகமுடியும்
நம் எதிர்கால சந்ததியையும்
விட்டுக்கொடுப்பது சரியா?
நம் இளம் தலைமுறையை தவிக்கவிடுவது சரியா?
நாம் வாழ்வது எதற்காக?
நம்மோடு நம் இனம் சிதைந்து போவதற்கா?
அலச்சியம் வேண்டாம், அதிர்ச்சிதரும் செய்திகளும் வேண்டாம்..
நெஞ்சை பிசையும் வேதனையும் வேண்டாம்..