அர்த்தமில்லை
காற்றைக் கிழித்திடப் பயந்திடும் விமானம்,
தண்ணீர் நனைக்கத் தயங்கிடும் படகும்,
நெருப்பைத் தீண்டிட மறுத்திடும் திரியும்,
நிலத்தைப் பிளந்திட மறந்திடும் விதையும்,
முயற்சி செய்யாமல் மடிந்திடும் மனிதனும்,
இருப்பதற்கு அர்த்தமும் இல்லை.
இறந்தால் வருத்தமும் இல்லை.

