பெண் மென்மையானவளா......?

பிறந்த வீடு விட்டு
புகுந்த வீட்டில்
புகுகையில்
மனதைப் புண்படுத்தும்
வார்த்தைகளைக்
கேட்க நேரிடும் போதும்

தன் உயிர்
போகும் வலியில்
இன்னோர் உயிரைப்
பிரசவித்த பின்பும்

தான் நேசித்த
தன் கணவன்
தன்னைத் தாழ்த்திப்
பேசும் தருணங்களிலும்

பெண்ணின் முகத்தில்
தோன்றும் புன்சிரிப்பைக்
கண்டபின்புமா கூறுகிறீர்கள்
பெண் மென்மையானவள் என்று ....?

வலிகளைத் தாங்கும்
வல்லமை படைத்த
சக்தி அவள்........
-பாரதி கண்ணம்மா

எழுதியவர் : பாரதி கண்ணம்மா (3-Aug-12, 8:12 pm)
பார்வை : 219

மேலே