கிராமத்து காதலி
கருப்பு முகத்தில்
கடுகளவு மூக்குத்தி
காதில் டோலக்கு
சிவப்பு தாவணி
சீகையில் குஞ்சன் என்று
முத்துபால் சிரிக்க
முன்னாள் வரும்
கிராமத்து காதலியே !
இபோது நீ
நகரத்தின் அடையாளமாய்
சுடிதாரை மாட்டிகொண்டு
சுருள் முடியை பறக்க விட்டு
முகமெல்லாம் கிரிம் பூசி
முன்வரும் போதெல்லாம்
நான் தொலைத்தது உன்னையல்ல
என் கிராமத்து
தேவதையை !