வேறென்ன வேண்டுமுனக்கு ?!

உன் தோள்
கேட்கும் காதலி,
உனக்கு தோள்
கொடுக்கும் நண்பன்,
உலகை வெல்ல
வேறென்ன வேண்டுமுனக்கு ?!!
எவன் ஒருவனுக்கு முன்
உன் தோல்வியும்
வெற்றியாய் தோன்றுகிறதோ,
அவன் நட்பின் வண்ணம்
பூசியவனாய் இருப்பான் !
கடவுளை அடைய இரு வழிகளுண்டு !
காதலிப்பது சுற்றுவழி,
நட்பு கொள்வது நேர்வழி !
எதிபாலின ஈர்ப்புடன் கூடிய
ஆழ் நட்பு காதல் !
பாலினங்களுக்கு அப்பாற்பட்டு
எதற்கும் உட்படா உறவது நட்பு !
உலகின் எல்லா உறவுகளுமே
எதாவது ஒன்றை எதிர்பார்க்கும்,
நட்பொன்று மட்டுமே
எதிர்பார்ப்புகளை
தின்று செரிக்கும் ஒரே உறவு !
காதலில்
கசக்கும் காலங்கள்
வருவதுண்டு !
நட்பின் வசந்த காலம் தவிர
வேறு காலங்களை தாங்கும்
களங்கள் இல்லை !