கவிதைப்பக்கம்!!!

ஆயிரம் வார்த்தை அழகாய்
கோர்க்கப்பட்டாலும் கவிதைதான்!
ஒரு வரியில் உன்வார்த்தை
உணர்ச்சியால் செதுக்கப்பட்டாலும் கவிதைதான்!

உரைநடை இலக்கணம் ஒன்று சேர
அமைந்தாலும் கவிதைதான்!
உன் இயல்பான வார்த்தை ஒருவர்
மனதில் நின்றுபோனாலும் கவிதைதான்!

கற்பனை சில பலருக்கு உண்மையாய்
தோன்றுவதும் கவிதைதான்!
உண்மைகள் பல சிலருக்கு கற்பனையாய்
மாறுவதும் கவிதைதான்!

கவிஞன் காவியத்தில் எழுத்திட்ட
வார்த்தைகளும் கவிதைதான்!
களைக்கூத்தாடி கண்ணீரில் எழுத்திட்ட
வார்த்தைகளும் கவிதைதான்!

எழுத்துக்கள் மட்டும் கவிதை ஆகுவதில்லை
இந்த கவிதை பக்கத்தில்…..

பிறக்கின்ற குழந்தையின் அழுகை கவிதைதான்
இறக்காத இறைவனின் இயல்புகள் கவிதைதான்
மழலையின் மணல் விளையாட்டும் கவிதைதான்
இளமையின் காதல் விளையாட்டும் கவிதைதான்

மலைத்துப்போகும் மனித
படைப்புகள் கவிதைதான்
களைத்துப்போகாத ஏழையின்
உழைப்பு கவிதைதான்

பிரசவகாலத்தில் பெண்ணின்
வயிறு கவிதைதான்
மழைக்காலத்தில் மண்ணின் மணமும்கவிதைதான்

காலைப்பொழுதில் கதிரவன்
உதயம் கவிதைதான்!
மாலைப்பொழுதில் மதியில்
கொஞ்சும் அழகும் கவிதைதான்!

வெள்ளித்தூரல் வெயிலில்
வருவது கவிதைதான்!
வெளிச்சம் வெட்கப்பட
வரும் கார்மேகம் கவிதைதான்!

பெண்ணின் கழுத்தோடு தோள்சேரு இடமதில்!
காதோர கம்மலின் அசைவு கவிதைதான்!
ஆணின் அலுத்துப்போகாத உழைப்பில் அவன்!
மெய்யில் தோன்றும் வியர்வை கவிதைதான்!

தவழ்ந்த குழந்தை எழுந்து!
நடந்தால் கவிதைதான்!
தளர்ந்த முதுமை தடிக்கொண்டு!
நடந்தால் கவிதைதான்!

ஆண் பெண் தன்னிலை அறியாது!
ஏற்படும் மோகம் கவிதைதான்!
அது கொள்ளும் காமம் அளவாய்!
இருந்தால் அது கவிதைதான்!

மனதை வருடி மயக்கம் தரும்
தமிழிசை பாட்டும் கவிதைதான்!
மார்போடு அனைத்து இமைமூட
தாய்பாடும் தாலாட்டும் கவிதைதான்!


அன்பு என்பது அதிகம்
கிடைத்தால் கவிதைதான்!

ஆசைக்கு எல்லை இருந்து
விட்டால் கவிதைதான்!

இயற்க்கையை கெடுக்காத
இயந்திரம் கவிதைதான்!

ஈன்றவள் பெருமைப்பட
நீ வாழ்ந்தால் கவிதைதான்!

உண்மை பொய்யிடம்
தோற்காதவரை கவிதைதான்!

ஊமைப் பேசும் ஜாடைப்
பேச்சு கவிதைதான்!

எளிமை என்பது பணம்
இருப்பவர் கொண்டால் கவிதைதான்!

ஏழ்மை என்பது இனி
இல்லாமல் இருந்தால் கவிதைதான்!

ஐம்புலன்களை அடக்கி
வாழ்தல் கவிதைதான்!

ஒருமைப்பாடு என்பது அனைவரிடத்தில் இருந்துவிட்டால் கவிதைதான்!

ஓசை என்பது செவிக்கு
விருந்தானால் கவிதைதான்!

ஔடதம் என்பது எதற்கும்
இருந்துவிட்டால் கவிதைதான்!

ஃ என்பது முதலெழுத்தானால்
அது ஆச்சரிய கவிதைதான்!

அடுத்தவர் படைப்பை தழுவமால்
நாம் புதுமையாய் படைக்கும் எந்த ஒரு
படைப்பும் கவிதைதான்.....

-பிரபுராஜ்.மு

எழுதியவர் : Golden Prabhuraj (6-Aug-12, 6:29 pm)
பார்வை : 190

மேலே