பிரபுராஜ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரபுராஜ் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 01-Jul-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 236 |
புள்ளி | : 95 |
கவிதைகளின் காதலன்
என் நிழலோடு சேராது இடைவெளிவிட்டு, என்னோடு சேர்ந்தே நடந்துவர சிறுகோபம் கொண்டாய்,
உன் நிழலோடு இன்னும் நான் ஊடல் கொள்ள, என் நிழல் தொடுவதையும் பாவம் என்றாய்,
அதிசய கார்மேகம் நம் நிழல்களை சாகடிக்க சிறு புன்னகை ஏனோ கொண்டாய்,
பின் அச்சுறுத்தும் இடி முழங்க, சட்டென என் தோள் சாய்ந்து அத்தனையும் காதல் என்றாய்!
- பிரபுராஜ்
கல்லூரி முதல் நாள் அடியெடுத்து
வைக்கும் போது தெரியவில்லை
அனைவரும் எனக்கு நண்பர் ஆகிவிடுவர்
அந்த ஒருத்தியை தவிர.....
ஆம்.. அவள் தான் என் காதலி.
அவளின் மாநிற மேனியில் உள்ள
மாப்பிஞ்சு கண்களுக்கு நான் மட்டும் ஏனோ
பிடிக்காமல் போய்விட்டேன்
பார்த்த முதல் நாளே!!!
அவளை பார்த்த நொடிப்பொழுதில்
சொல்லிவிட்டேன் என் காதலை..
வேறொரு தீங்கும் செய்திடவில்லை
என்னை பிடிக்காமல் போக...
வெறுத்த போதும் பின் தொடர்ந்தேன்
என் உயிர் வாழ ஒரு வழியில்லாமலும்...
கருத்த மேனி கொண்ட என்னை காதல் கொள்வாளோ என்ற கலக்கமில்லாமலும்...
தோழிகளுடன் சிரித்து பேசி வந்தவள்
ஏனோ ஒரு நிசப்தம் கொண்டாள்
எனைக் கண்டதும்..
தாய்ப்பால் குடித்து வளர்ந்த நான்
தமிழ்ப்பால் குடிக்க ஆரம்பித்தேன்
என் முதல் வகுப்பில்...
தவழ்ந்தபடி திரிந்த நான் என்
கால்களை மடக்கியபடி உட்கார்ந்தேன்
அமைதியாய் வகுப்பறையில்
என் பிஞ்சு விரல்களில் அப்பா
ஆசையாய் வாங்கி கொடுத்த
பலகையும், பல்பமும்
கையில் இருக்க...
அவசரமாய் அன்னை கட்டிக்கொடுத்த
திண்பன்டம் பத்திரமாய்
பையில் இருக்க...
வணக்கம் பிள்ளைகளே என்று
வாசல் நோக்கி வந்த ஆசிரியரிடம்
எழுந்து நின்றபடி கூறிய முதல் வார்த்தை
வணக்கம் டீச்சர்.....
பார்த்திடாத பல்பம் கையில் இருக்க
என்ன செய்வதென்று தெரியாமல்
தின்று கொண்டிருந்தேன்...
அதில் பாதியை..
கரு