ஊடல்

என் நிழலோடு சேராது இடைவெளிவிட்டு, என்னோடு சேர்ந்தே நடந்துவர சிறுகோபம் கொண்டாய்,

உன் நிழலோடு இன்னும் நான் ஊடல் கொள்ள, என் நிழல் தொடுவதையும் பாவம் என்றாய்,

அதிசய கார்மேகம் நம் நிழல்களை சாகடிக்க சிறு புன்னகை ஏனோ கொண்டாய்,

பின் அச்சுறுத்தும் இடி முழங்க, சட்டென என் தோள் சாய்ந்து அத்தனையும் காதல் என்றாய்!

- பிரபுராஜ்

எழுதியவர் : பிரபுராஜ் முருகன் (5-Jul-18, 11:29 pm)
சேர்த்தது : பிரபுராஜ்
Tanglish : oodal
பார்வை : 85

மேலே