022 -- மக்களில் இவர்களும் சேர்த்தியோ..?

தூ.சிவபாலன் அவர்களின் "என் அழுகை வெளிவருவதில்லை ..." என்ற பாட்டுக்கு எதிர்பாட்டு.

இறந்தும் வாழ்வதும்
இருந்தும் சாவதும்
இயற்கையே உனக்கு நியாயமோ?

பிறந்தபொன் நாட்டின்
பெருமைகாத் தழிந்தவர்
பெண்டிருக் கின்னிலை அடுக்குமோ?

சிறந்தவர் என்றே
சிரசினை உயர்த்திச்
சிந்தனை செய்பவர் இல்லையோ?

மறந்தவர் இதனை
மக்களில் சேர்த்தியோ?
மாண்டதில் பண்புகள் சேர்த்தியோ?
-௦-

எழுதியவர் : வசந்திமணாளன் (9-Aug-12, 7:45 am)
சேர்த்தது : vasanthimanaalan
பார்வை : 133

மேலே