நினைவுகள்

அலைபாய்ந்து அலைந்து இறுதியானபின் உறுதியுடன் உன் முகம் காண மட்டுமே என் உன் பயணம்.
அங்கே,
உறவாடிய உன் காந்த கண்கள்,
உதிர்ந்த இரகசிய புன்னகைகள்,
பரப்பிய உன் அங்க அசைப்புகள்,
நிரந்தரமாக்கத் துடிக்கும் உன் இன்ப அதிர்வுகள், வழிமுறைகள் கற்றுத்தர விழையும் உன் சிந்தனைகள்,
முடிவில்லை ஆரம்பம் எனும் அரட்டல்,
சிறகிருந்தால் பறந்துவிடும் உன் இளமை,
உணர்ந்து கொண்ட உன் முழுமை,
மிச்சமாகிப்போன எல்லா இந்த கலவைகளின் உச்சம்,
தொடர்கதையாய் போன என் மூளைச்சுளுக்கு,
முடிவாய் முட்டாள்தான் நானும்.
ருசியாய் இன்னும் என் நினைவுகளில் நிகழ்வுகள், உன் அடுத்த சந்திப்புவரையினில்.
எப்படியும் துணிவேன் என்ற முறைப்புடன்.


எழுதியவர் : jujuma (7-Oct-10, 1:05 pm)
சேர்த்தது : nellaiyappan
Tanglish : ninaivukal
பார்வை : 447

மேலே