காதல் என்றால் என்ன?

என்னவென்று தெரியாதவரை
அதை நேசிக்கிறார்கள்!
இதுதான் என்று தெரிந்தால்
அதை ஏனோ நேசிக்க யோசிக்கிறார்கள்!

என்னவென்று தெரியாமல்
நேசிக்கப்படுவது காதலும் இல்லை!
என்னவென்று புரிந்து செய்த காதலின்
அருமை பிறருக்கு தெரியாமல் போவதுமில்லை!

முதலில் காதலை நேசி...
பிறகு காதலிக்க நீ யோசி....

காதலை நேசித்தவன் கண்களுக்கு
காமம் தெரிவதில்லை!
காதலை நேசிக்காமல் காதலிப்பது
காதலும் இல்லை!

எழுதியவர் : (19-Aug-12, 10:00 pm)
பார்வை : 2314

மேலே