மௌனத்தின் மொழி

கண்கள் நான்கும் பேசும் போது,
காதல் மொழி மௌனமொழி....
பெண்கள் நாணம் கொள்ளும் தருணம்,
பிறக்கும் மொழி மௌனமொழி....

கரையெங்கும் அலை ஓய்ந்த பின்,
அவை உரைக்கும் மொழி மௌனமொழி....
மழலை பேசும் முதல் மொழி,
அமைதி எனும் மௌனமொழி....

தூக்கம் இமையைத் தழுவும் நேரம்,
கனவுகளின் மொழி மௌனமொழி....
நோக்கம் எது இல்லா நேரம்,
நாம் பேசும் மொழி மௌனமொழி,

ஏக்கம் உன்னைத் தாகும் நேரம்,
தூக்கமில்லா சோகமொரு மௌனமொழி....
தூக்கம் சற்றுமின்றி வாடும் நேரம்,
கண்களின் வீக்கமொரு மௌனமொழி....

மழை அடித்து ஓய்ந்த பின்,
மண்வாசனை ஒரு மௌன மொழி....
சிலை வடிவாய் வடித்த போதும்,
அது பேசும் மொழி மௌனமொழி....

காதல் மறையக் கண்ட போது,
கண்களின் நீரும் மௌனமொழி....
அவளைப் பிரிந்த அந்த வலி,
மௌனமெனும் கண்ணீர்த் துளி....!!!!

எழுதியவர் : பிரதீப் (26-Aug-12, 9:26 am)
பார்வை : 310

மேலே