வானவில்

ஏழு வண்ணம் கொண்ட கரம்,
விரல் ஒவ்வொன்றில் வெவ்வேறு நிறம்....
மேக வீதியில் உதிப்பாள்,
பூமி தாகம் தீர்க்கும் பொழுதினிலே....

இயற்கை இட்ட கோலம்,
இறக்கை இல்லா பறவையோ....
வான்மகள் கதறும் நேரம்,
வண்ணம் ஏழும் வண்ணக் குடையோ....!!!!

எழுதியவர் : பிரதீப் (26-Aug-12, 9:38 am)
பார்வை : 282

மேலே