மதத்தின் அளவு மட்டுமே

ஆயிரமாயிரம்
சடங்குகள்
ஆயிரமாயிரம்
நடைமுறைகள்
அத்தனையும்
மனிதர்களை
ஒன்று சேராமல்
தடுக்கும் கோடுகளாய்

கயிற்றை கட்டி
கிணற்றுக்குள்
இறக்கிவிடப்படும்
தவளை போல
மனிதன்
மதக் கிணற்றுக்குள்
இறக்கிவிடப்படுகிறான்
சடங்குகள் என்னும்
கயிறால்
குழந்தைப் பருவம் முதல்

கிணற்றுக்குள் இறங்கி
நீந்தவும் முடியாமல்
கிணற்றுக்கு மேலேவந்து
குதிக்கவும் இயலாமல்
கயிற்றின் அளவு மட்டுமே
வாழும் தவளைபோல்
மதத்தின் அளவு மட்டுமே
சிந்திக்கவும்
செயல்படவும்
இயலும் மனிதர்கள்
உலகமாய்
நாம் வாழும் உலகம்

எழுதியவர் : வா. நேரு (27-Aug-12, 1:00 pm)
பார்வை : 226

மேலே