காத்திருக்கிறேன் ....

''என்னோடு பேசாமல்
உன்னால்
இயல்பாக இருக்க
முடியுமா முடியாதா
என்று சோதிக்கத்தான்
இத்தனை நாள் உன்னோடு
பேசாமலிருந்தேன் ''
என்று சொல்லி
பேசிவிடமாட்டாயா
என ஒவ்வொரு கணமும்
ஏக்கத்தோடு
காத்திருக்கிறேன் ....

எழுதியவர் : ஹரிப்ரியா (28-Aug-12, 10:29 am)
Tanglish : kaathirukiren
பார்வை : 196

மேலே