முரண்பாடு-க வுக்கும்;கா வுக்கும்;
அடடா இது என்ன
வாழ்க்கை
பிடிக்கவில்லை நீ
கருத்து ஒத்துப்
போகலை போ
நீ எனக்கு வேண்டாம்
நீ இல்லாத வாழ்க்கை
சொர்க்கம் - நீ
இல்லாமல் நான்
தனியாக இருந்து
ஜெயித்துக் காட்டுவேன் பார்
முன் போல் இல்லையே நீ
என்னைக் காதலித்து
ஏமாற்றி கரம் பிடித்து
இன்று நான்
சொல்வதெல்லாம் கேட்க
நேரம் இல்லை உனக்கு
என் பெற்றோர் பார்த்த
பையன் இது போல்
இருந்திருப்பானா
என்னை மனமொடியச்
செய்வானா போ
நாம் பிரிந்து விடுவதே
உனக்கும் எனக்கும்
நிம்மதி.......இப்படிக்கு க;
அச்சச்சோ நாம் அவரை
அந்த மாதிரி பேசிட்டோமே
அவர் எனக்குப்
பிடிச்சமாதிரி தானே
நடந்துக்கிறார்
அவர் இல்லாத வாழ்க்கையை
என்னால் நினைத்துக் கூட
பார்க்க முடியாது
நீங்கள் இல்லாத இடம்
எனக்கு நரகம்
எங்கேயும் என்னைத்
தனியாக அனுப்பமாட்டாரே
அன்றிலிருந்து இன்று வரை
ஒரே மாதிரிதான் இருக்கார்
என்னை அவர் எப்படி
ஏமாற்ற முடியும்
இன்று வரை என்
பேச்சைத் தானே
கேட்கிறார் - எனக்காகத்
தானே நிற்க கூட
நேரமில்லாமல் ஓடி ஓடி
உழைக்கிறார்
என் வீட்டில் பார்த்தவன் கூட
இந்த அளவுக்கு
இருந்திருக்கமாட்டான்
அவரை விட்டு பிரிய
நினைத்தேனே நான் ஒரு
பைத்தியம்
இனி பிரிவு என்பது
வார்த்தையாகக் கூட
வர வேண்டாம் - இன்று
அவரிடம் மன்னிப்புக்
கேட்காதவரை எனக்கு
நிம்மதி இல்லை.........இப்படிக்கு கா;
காதல் திருமணமோ
நிச்சய திருமணமோ
இந்த முரண்பாடு
இருக்கும் வரை பிரிவு
ஏற்பட ஏது சாத்தியம் !!!
(இங்கு நம் கலாச்சார பெருமைக்கு நான் தலை வணங்கி கொள்கின்றேன்)