வடுக்கள்
என்று என
எதிர்பார்க்கிறேன்
புதிர் கொண்ட வாழ்வில்
நாம் சேர்ந்து செய்த
குறும்புகள் கண்ணில்
வந்து போகையில்
நாம் பகிர்ந்து கொண்ட
நினைவுகள் நம்
நெஞ்சில் சுமக்கையில்
கனத்துக் கிடக்கும்
இதயம் நம் நட்பு தேடி
அலைகையில்
நானும் நம் நண்பர்களும்
நாம் என்றுமே பிரியக்
கூடாது என்று எடுத்துக்
கொண்ட சத்தியப் பிரமாணம்
காதில் ஒலிக்கையில்
பல்வேறு திசைகளில்
சிதறிய முத்துக்களாய்
நாம் இன்று கிடக்கையில்
தொலைந்த நட்பை
மீட்க வழி காண
முற்படுகையில்
நம் வாழ்வில்
பல்வேறு நிகழ்வுகள்
இடைவெளியின்றி
தொடர்கையில்
மனதுக்குள் நம் நட்பின்
கைகள் ஒன்று கோர்க்கும்
அந்த இனிமை படர்கையில்
காலத்தோடு முட்டிக்
கொண்டு வாழ்க்கையையும்
ஓட்டிக் கொண்டிருக்கையில்
நாம் கடைசி நாளில்
பிரியா விடை பெற்று
இன்று பிரிந்த வாழ்கையில்
நாம் சிந்திய அந்த
கண்ணீர்த் துளிகள் கூட
நமக்காக ஈரமுடன்
இன்னும் காத்திருக்க
வேண்டுவோம் நம்
பட்டுப் போன நட்புக்காக !!!