ஆசைகளும் நம்பிக்கையும்

நீல வானின்
நிழலில்
உறங்கியதில்லை

சித்திரை வெயிலிலும்
சில்லென சிரிக்கும்
கோடை மழையில்
நனைந்ததில்லை

கந்தக புகையில்
மூச்சு திணறும்
முழுநிலவுக்காக
வருந்தியதில்லை

முதுகெலும்பு வளைய
புத்தக மூட்டை சுமக்கும்
இளந்தலைமுறையின் வருன்காலம் குறித்து
அச்சபட்டதில்லை

(கூலி வேலைக்காக
விற்கப்படும் குழந்தைகளை போல)
மொத்த இந்தியாவையும்
வெளிநாட்டு முதலாளிகளிடம்
விற்கும் அரசாங்கம் குறித்து
கோபப்பட்டதில்லை

கரை தொடும் முன்பே
அடித்து நொறுங்கும்
கடல் அலைபோல் ஆசைகளும்
அதை துரத்திக்கொண்டும் ஓடுகிறோம்

ஆசைகளோடு
சிறிது அக்கறையும்
கலந்து காத்திருப்போம்
கரை உடைப்போம் எனும் நம்பிக்கையோடு !!!

எழுதியவர் : குருநாதன் (28-Aug-12, 1:19 pm)
சேர்த்தது : gurunathan
பார்வை : 163

மேலே