கோடுகளைத் தாண்டாத சீதைகளாய்....

உனக்காக
ஒரு கோடு போட்டு கொள்!
அது..
லக்ஷ்மண ரேகை அல்ல..
உன்..
லட்சியப பாதை!
கோடுகளை தாண்ட,
காதல்...
கவர்ச்சி..
ஆசை..
அலட்சியம்...
ராவணர்களாய்..வந்து அழைக்கும்!
பற்றுதல்களே..
பத்து தலையாய்
கண் முன் விரிந்து நிற்கும்!
அடி பணிந்தால்..
நிராயுதபாணியாய்
நிர்கதியாய்
உன்னை நிறுத்தும்!
தேவையை உணர்ந்து ,
காலத்தை புரிந்து..
கால்கள் பயணிக்கட்டும்!
அன்பை விதைத்து,
அழகை ரசித்து,
நேசம் வளர்த்து.
நெஞ்சம் நிமிர்த்தும்
அர்ஜுன பார்வையில்
அவதானித்து,
கோடுகளைத் தாண்டாத சீதைகளாய் இரு!
காலத்தால் கை விடப்படாதவனாக
நீ இருப்பாய்!
நண்பர்களும்,
நட்பும்..
எப்போதும்
உன்னுடன் இருக்கும்!