மழை

இசைக்கருவி எதுமில்லாமலே
மௌனத்தை களைக்கும்
இன்னிசை நீ !!
நிகரில்லா அழகுடைய
நதிகளின்
இரத்தஓட்டம் நீ !!
கரிசல் காட்டிலும்
கப்பல் மிதக்கவைக்கும்
கலைஞன் நீ !!
கூரையில்லா கழிவறைகளை
சுத்தம் செய்யும்
சுகந்தம் நீ !!
அனாதையாய் விடப்பட்ட
மரங்களுக்கு நீரூட்டும்
அன்னை நீ !!