பெண்
என்னைக் காற்றும்
தவறாய்த்
தீண்டுமானால்
புன்னகைக்க நான்
பூ அல்ல பெண்
நிமிர்ந்த நடை
நேர் கொண்ட பார்வை
பாரதி கண்ட கனவு
நான் புதுமைப்பெண்
எனக்கும் ஆண் நண்பர்கள்
உண்டு தாய் போல
புன்னகை மட்டும்
நட்பு வளர்க்காது
என் கோபமும்
நட்பு வளர்க்கும்
முதுமை
காண மாட்டேன் இது என்
மனம் விடுக்கும் அறைகூவல்
என் பாதையில்
கிடக்கும் முள்,கல்
கவனிக்க நேரம் இல்லை
நான் திமிர் பிடித்தவள்
என்னை அது
சிறப்பாய்க் காட்டும்
நான் பொறுமை
கொண்டுவிடுவேன்
எனக்கு தோல்வி
பொன் விரும்பவில்லை
கொள்கை விரும்பினேன்
அன்றுபோல்
இன்றுவரை
என்றுமே
முயல்கிறேன்
புது உலகம் காண
இது தினமும்
நான் விழித்திருக்கும்
போது காணும் கனவு !!