குவாரி ராசாக்களின் பளிங்குக் கோட்டை

பல்லவ ராசாக்களை
மண்ணைக் கவ்வ வைத்த
குவாரி ராசாக்களின்
கும்மாளத்தை பாரீர்

பளிங்கு கோட்டை
அழகு சிலைகள்

அருங்காட்சியாக
அடுக்கி வைக்கலாம்.
அவர் கைகளுக்கு
பரிசளிக்கலாம்.

காணவில்லயாம்
புறாக்கூடு மலை,
ஓகாமலை,
பஞ்சபாண்டவர் மலை

யானை மலை மட்டும்
தப்பித்துக் கொண்டதாம்

காணாமல் போன
மலைகள்
சிலைகளானது இங்கே......

அன்று எழுதிய ஒரு பதிவு
ஞாபகம் வந்தது...............

மலையை உடைத்து
பாதாளம் தோண்டி
பளிங்கு கற்களை
பவ்வியமாய் எடுத்து
அடுக்கு மாளிகை
அழகுபட கட்டினாயே!

இயற்கை வளத்தை
இல்லாமல் செய்யவா?

நாளை
நிலநடுக்கத்துக்கு
வழி செய்து விட்டாயே!
மக்கள் வாழ்வை
வதைத்து விட்டாயே!

என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (1-Sep-12, 3:52 pm)
பார்வை : 251

மேலே