என் உயிர் போட்ட கூச்சல்கள்

இமைகள் இமைக்காமல் பார்க்கும் போட்டியில்
நான் தோற்ற தருணங்கள் !

மழையில் நனையாமல் குடை பிடித்து
நாம் நனைந்த கனங்கள் !

முத்தம் தருவதை போல வந்து
தராமல் நகர்ந்த நிமிடங்கள் !

உன் இடுப்போரம் கைகளை நீட்டி
தொட மறுத்த என் கூச்சங்கள் !

காற்றில் உன் துப்பட்ட என் மேனியை
தழுவிட என் உயிர் போட்ட கூச்சல்கள் !

திருவிழாவில் கூந்தலில் பூ வை என்று
என்னிடம் நீ போட்ட சண்டைகள் !

ஊர் பார்க்கட்டும் என்றே என் கைகளை
கோர்த்து நடந்து காட்டிய சேட்டைகள் !

தண்ணீர் குடம் எடுத்து போகும் போது
என் மீது தண்ணீர் தெளித்த குறுப்புகள் !

உன் சிவந்த மேனியில் என் இதழ்
செய்த இரவு குறிப்புகள் !

காதலி காதலால் தினம் தினம்
வந்து செய்கிறது தொல்லைகள் !

எழுதியவர் : ஈரோடு irraivan (1-Sep-12, 4:44 pm)
பார்வை : 173

மேலே